சவூதி அரேபியாவில் இனி பெண்கள் வாகனம் ஓட்டலாம்

சவூதி அரேபியாவில் இனி பெண்கள் வாகனம் ஓட்டலாம்

1 mins read
de9abe67-6fa3-4a8f-a0af-43a49cc0d970
-

சவூதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்டுவதை அனுமதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சவூதி மன்னர் சல்மான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உலகிலேயே சவூதி அரேபியாவில்தான் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நாள் வரை அங்கு ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பெண்களுக்கான தடை நீக்கப்பட்டதற்கு உள்நாட்டிலிருந்து மட்டு மல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், "பெண் களுக்கான உரிமைகளை மேம்படுத்துவதில் ஆக்ககரமான முன்னேற்றம்," என்றார்.

டாக்சியில் ஏறும் பெண். சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண்களும் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஏஎஃப்பி