யிங்லக் இப்போது துபாயில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

யிங்லக் இப்போது துபாயில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

1 mins read

பேங்காக்: தாய்லாந்திலிருந்து தப்பிச்சென்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ரா தற்பொழுது துபாயில் இருப்பதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கூறியுள்ளார். திருவாட்டி யிங்லக் எங்கிருக்கிறார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் அவர் துபாயில் இருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி தாய்லாந்து போலிசார் வெளியுறவு அமைச்சுடனும் அனைத்துலக போலிசாருடனும் இணைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்று திரு பிரயுத் கூறினார். யிங்லக் பிரதமராக இருந்த காலத்தில் அரிசி மானிய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்கினார். இதனால் அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்துவதில் அவர் கவனக்குறைவாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.