தைவான்: பிலிப்பீன்சிலிருந்து தைவானுக்கு பயணம் செல்பவர்கள் இனி விசா அனுமதி பெற வேண்டியதில்லை. தைவானிய நாடாளுமன்ற பேச்சாளர் இதுபற்றிக் கூறினார். இந்த நடவடிக்கை இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கக்கூடும் என்றார் அவர். ஏற்கெனவே சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து தைவான் செல்வோர் விசா அனுமதி பெறத் தேவையில்லை. அடுத்து இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்குவது குறித்து தைவான் பரிசீலித்து வருகிறது.
தைவான் செல்ல பிலிப்பீன்ஸ் நாட்டவர்களுக்கு விசா தேவையில்லை
1 mins read

