யங்கூன்: மியன்மார் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் நடைபெறும் வன்முறைச் செயல்களைப் பற்றி நேரில் கண்டறிய ஐநா பிரதி நிதிகள் முதன் முறையாக மியன் மாருக்கு நேற்று செல்வதாக இருந்தது. ஆனால் மியன்மார் அதிகாரிகள் ஐநா பிரதிநிதிகளுக்கு வழங்கப் பட்டிருந்த அனுமதியை ரத்து செய்துவிட்டதாக பிபிசி செய்தி கூறியது. கடந்த மாதக் கடைசியில் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராக மியன்மார் ராணுவம் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இதைத் தொடர்ந்து ஐநாவின் மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகள் வலுக்கட்டாயமாக ராக்கைனிலிருந்து வெளியேற்றப் பட்டனர். மேலும் ராக்கைனிலி ருந்து பல ரோஹிங்யா முஸ்லிம் கள் பங்களாதேஷில் தஞ்சமடைந் தனர். மியன்மாரின் கலவரப் பகுதியில் நுழைய ஐநா அதிகாரிகள் மியன்மார் அரசிடம் அனுமதி வேண்டினர்.
இறுதியாக நேற்று அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் காரணம் ஏதும் தெரி விக்கப்படாமல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐநா பேச்சாளர் கூறினார். மியன்மாரி லிருந்து வெளியேறிய 700,000 ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஐநா வகுத்திருந்தது.

