தோக்கியோ: ஜப்பானில் திடீர் தேர்தல் நடத்துவதற்கு ஆயத்த மாக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நேற்று நாடாளு மன்ற கீழ் அவையைக் கலைத்தார். தேர்தல் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அதற்கான பிரசாரம் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் திரு அபேயின் செல்வாக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது கூடியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அவருக்கு 30% ஆதரவு மட்டுமே இருந்தது. தற்போது அவருக்கான ஆதரவு 50 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க திரு அபே விரும்புகிறார். இதனால் திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஓராண்டுக்கு முன்ன தாக தேர்தலை நடத்த அவர் தீர்மானித்ததைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற கீழ் அவை கலைக்கப்பட்டது.
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தோக்கியோவில் கட்சித் தலைமையகத்தில் அவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மக்களின் அமோக ஆதரவைப் பெறுவதற்காக திரு அபே தேர்தலை முன்கூட்டியே நடத்தவுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

