சீன உயர் அதிகாரிகளுடன் டில்லர்சன் ஆலோசனை

சீன உயர் அதிகாரிகளுடன் டில்லர்சன் ஆலோசனை

1 mins read

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சீன அதிபரையும் மற்ற உயர் அதிகாரி களையும் சந்தித்துப் பேசியுள்ளார். வடகொரிய விவகாரம் குறித்து அவர்கள் முக்கியமாக கலந்து பேசியதாகத் தெரிகிறது. வடகொரியாவின் அணு வாயுதத் திட்டத்தை தடுப்பதற் கான வழிகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று பெய்ஜிங் வந்துசேர்ந்த திரு டில்லர்சன் சீன உயர் அதிகாரி யாங் ஜிசியையும் வெளியுறவு அமைச்சர் வாங் யியையும் சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் சந்தித்தார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் சீனாவுக்கு வருகை அளிக்கவுள்ள நிலையில் அதற்கு ஆயத்தமான பணிகள் குறித்தும் திரு டில்லர்சன் சீன உயர் அதிகாரி களுடன் பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவு தற்போது மேம்பட்டுள்ள வேளை யில் திரு டில்லர்சனின் இந்த வருகை இடம் பெற்றுள்ளது.