'மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா'

'மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா'

1 mins read

சோல்: அனைத்துத் தடைகளையும் பொருட்படுத்தாது வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை சோதிக் கக் கூடும் என்ற யூகம் நிலவும் வேளையில் வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து பல ஏவுகணைகள் வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது தெரியவந்துள்ளது என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத் திலிருந்து பல ஏவுகணைகளை வடகொரியா எடுத்துச் செல்வதை தென்கொரிய மற்றும் அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்ததாக தென்கொரிய ஒலிபரப்புக் கழகம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது. அந்த ஏவுகணைகள் எப்போது, எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன என்ற விவரங்கள் தெரியவில்லை. அந்த ஏவுகணைகள் நடுத்தர வகையைச் சேர்ந்த ஹுவாசோங்-12 ரக ஏவுகணைகளாக இருக்கலாம் அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளாக இருக் கலாம் என்று கூறப்படுகிறது.