தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி எம்ஏசிசியிடம் ஒப்படைப்பு

தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி எம்ஏசிசியிடம் ஒப்படைப்பு

1 mins read
361b6f41-7dc1-4c56-84cc-e20d89b2bdf8
-

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறவுள்ள 14வது பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்ன ணியின் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசியிடம்) ஒப்படைக்கப்பட் டிருப்பதாக மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். மற்ற வேட்பாளர்களை முடிவு செய்த பின்னர் அவர்களின் பட்டியலும் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார். மற்ற வேட்பாளர்களின் பட்டியல் தயாராக இருந்த போதிலும் அப்பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இருக்கிறது என்பதால் அவர் அதனை வழங்கவில்லை. இந்தத் தகவலை திரு நஜிப் அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பின் தெரிவித்தார். வேட்பாளர்கள் தகுதி உடையவர்களா என்பதைக் கண்டறிய அவர்களின் பெயர்கள் எம்ஏசிசியிடம் கொடுத்திருப்ப தாகவும் தேசிய முன்னணி மட்டுமே அப்படி செய்திருப் பதாகவும் திரு நஜிப் கூறினார்.

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடியும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: பெர்னாமா