வாஷிங்டன்: பணி நிமித்தம் காரணமாக பல்வேறு இடங்க ளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது ஆடம்பர தனியார் விமானங்களைப் பயன்படுத்தியது தொடர்பில் அமெரிக்க சுகாதார அமைச்சர் டாம் பிரைஸ் பதவி விலகியதாக வாஷிங்டன் தகவல்கள் கூறின. அவரது பதவி விலகல் கடிதத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக அதிபர் மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா ஹுக்காஃபி சாண்டர்ஸ் தெரிவித்தார். சுகாதார துணை அமைச்சர் டான் ஷே ரிட் தற்காலிக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்தது. தேசிய பாதுகாப்பு விவ காரங்களைக் கையாளும் அதிகாரிகளைத் தவிர மற்ற அரசாங்க உயர் அதிகாரிகள் தங்கள் பணி தொடர்பான பயணங்களுக்கு சாதாரண விமானங்களிலேயே செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது அதை மீறி திரு டாம் பிரைஸ் 26 முறை தனி விமானங்களைப் பயன் படுத்தியதாகக் கூறப்பட்டது.
அமெரிக்க சுகாதார அமைச்சர் டாம் பிரைஸ் பதவி விலகினார்
1 mins read

