டுட்டர்ட்டே: பரம்பரைச் சொத்து, ஊழலில் சம்பாதித்தது இல்லை

டுட்டர்ட்டே: பரம்பரைச் சொத்து, ஊழலில் சம்பாதித்தது இல்லை

1 mins read
b9b00074-3485-4f1b-a06f-07c11b9768ab
-

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். அதிபர் டுட்டர்ட்டே முறைகேடான முறையில் சொத்து சேர்த்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். அதிபர் டுட்டர்ட்டேவின் வங்கிக் கணக்கில் கிட்டத் தட்ட பல மில்லியன் அளவிலான கணக்கில் வராத தொகை உள்ளதாகவும் இது சட்டவிரோதச் செயல் என்றும் ஊழல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரி கூறினார்.

நேற்று நடைபெற்ற உள்ளூர் வழக்கறிஞர்கள் சந்திப்பில் இதற்கு பதில் அளித்து பேசிய அதிபர், இந்தக் குற்றச்சட்டுகள் ஆதாரமற்றவை என்று ஊழல் தடுப்பு துறையைச் சாடினார். மேலும் இந்தச்சொத்து தமது குடும்பச்சொத்து என்றும் அதன் மொத்த மதிப்பு 40 மில்லியன் பெசோ( S$1.06 மில்லியன்)வை விடக் குறைவானது என்றும் கூறினார். தேச மக்கள் முன்னிலையில் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பக்கூடாது என்றும் அதிபர் டுட்டர்ட்டே கூறினார்.