இலங்கையில் ரோஹிங்யாக்களைத் தாக்கிய 6 புத்த பிக்குகள் கைது

இலங்கையில் ரோஹிங்யாக்களைத் தாக்கிய 6 புத்த பிக்குகள் கைது

1 mins read
59afc30f-24a2-40a2-8e2a-607808ce5ba3
-

கொழும்பு: ரோஹிங்யா அகதிகளைக் கடந்த வாரம் தாக்கியதன் தொடர்பில் புத்த பிக்குகள் தலைமையிலான கும்பலைத் தேடிய போலிசார் ஆறு பேரை நேற்று கைது செய்தனர். கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள முகாமில் சிறுவர் உள்ளிட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது சென்ற செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் புத்த பிக்குகள் மிருகத்தனமாக நடந்துகொண்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியது. அந்தத் தாக்குதலை நடத்திய பிக்குகளை அடையாளம் கண்டிருப்பதாக விசாரணையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி தெரிவித்தார்.

அவர்களைக் கைது செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சென்ற வாரம் நடத்திய தாக்குதலில் காயமுற்ற இரண்டு போலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். பிக்குகளும் அவர்களது ஆதரவாளர்களும் அகதி கள் முகாமின் மீது கற்களை எறிந்து சன்னல்களையும் தளவாடங்களையும் உடைத்ததாகச் சொல்லப்படுகிறது.