'வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதால் பலன் இல்லை'

'வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதால் பலன் இல்லை'

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்னும் வடகொரியாவுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என்றும் வடகொரியாவுடன் திரு டில்லர்சன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை பற்றிய விமர்சனங்களுக்கு முக்கியத் துவம் தர வேண்டாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறி யுள்ளார்கள். சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர், வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் இரு நாட்டுக்கும் இடையே பேச்சு வார்தை தொடர சாத்தியம் இருப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து டிரம்ப் "உங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம். சேமியுங்கள். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம். 25 ஆண்டுகளாக தீர்வுக் காணப்படாத ஒன்றுக்கு தற்பொழுது பேச்சுவார்தை மூலம் எவ்வாறு தீர்வு காணமுடியும். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் இதில் தோல்வி அடைந்தனர். ஆனால் நான் தோற்கமாட்டேன்" என்று திரு டிரம்ப் டுவிட்டரில் எழுதி இருந்தார். இதைத் தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளியாகின.