அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நக ரில் கொடூரத் தாக்குதல் நடத்திய ஸ்டீஃபன் கிரேக் பேடோக் தங்கி இருந்த ஹோட்டல் அறையிலும் அவனது வீட்டிலும் ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலே நவீன அமெரிக்காவின் ஆக மோசமானது என்று கூறப்படுகிறது. லாஸ் வேகஸ் வில்லேஜ் திறந்த வெளியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் ஒன்றுதிரண்டு இருந்தபோது அவர் களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 59 பேர் மாண்டனர், 527 பேர் காயமுற்றனர். ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 பேர் மாண்டதே இதுவரை ஆக அதிக மான உயிர்ச்சேதமாக இருந்த நிலையில் இச்சம்பவம் அதைவிட மோசமாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு அருகே மாண்டலே பே ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியின் 32வது மாடி யில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத் தப்பட்டது. அந்தத் தாக்குதலை நடத்தியவன் ஸ்டீஃப்ன் பேடோக் என்றும் அவனது வயது 64 என்றும் பின்னர் போலிசார் அடையாளம் கண்டனர். துப்பாக்கியால் சரமாரி யாகச் சுடப்பட்ட சிறிது நேரத்தில் போலிஸ் அதிகாரிகள் மாண்டலே பே ஹோட்டலைச் சூழ்ந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய பின் தமது உயிரை விட்ட ஸ்டீஃபன் பேடோக் (வலது) தமது சகோதரர் எரிக் பேடோக்குடன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட படம். படம்: பேடோக் குடும்பம்

