பழங்கால தட்டு S$52 மில்லியனுக்கு ஏலம் போனது

பழங்கால தட்டு S$52 மில்லியனுக்கு ஏலம் போனது

1 mins read

ஹாங்காங்: சீனாவின் சோங் சாம்ராஜ்ஜியத்தில் பயன்படுத்தப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்டு 37.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$51.5 மில்லியன்) நேற்று ஏலம் போனது. ஏலம் போன அந்தத் தட்டு கி.பி. 960 ஆம் ஆண்டு முதல் 1127 ஆம் ஆண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் மிங் சாம்ராஜ்ஜியத்து பழரசக் கோப்பை 36.05 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. அதனை ஒரு ஷாங்ஹாய் செல்வந்தர் ஏலத்திற்கு எடுத்தார் என சோதபி ஏலக்குழு தெரிவித்தது. 10.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஏலம் இருபது நிமிடங்களில் முடிவடைந்தது.

இந்தத் தட்டின் விட்டம் 13 செண்டி மீட்டர் கொண்டது. பளபளக்கும் நீல நிறத்தால் ஆன இந்தத் தட்டு சீன ஏலப் பதிவில் தற்சமயம் முன்னணி வகிக்கின்றது. இதே மாதிரியான தட்டுகள் நான்கு இருக்கின்றன. மற்ற மூன்றும் வெவ்வேறு தனி நபர்களிடம் இருப்பதாக அந்த ஏலக் குழு தெரிவித்தது. சீன வரலாற்றில் முக்கிய சாம்ராஜ்ஜியமான சோங் சாம்ராஜ்ஜியத்தில் பயன்படுத்தப்பட்ட இந்தத் தட்டு மிக அரிய வகைத் தட்டு என்பதால் இதன் ஏலத் தொகை அதிகரித்தது.