தாய்லாந்திற்கு ஏற்றுமதியை அதிகரிக்க விரும்பும் அமெரிக்கா

தாய்லாந்திற்கு ஏற்றுமதியை அதிகரிக்க விரும்பும் அமெரிக்கா

1 mins read

வா‌ஷிங்டன்: தாய்லாந்திற்கான அமெரிக்காவின் ஏற்றுமதியை அதிகரிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டு வா‌ஷிங்டன் சென்று சேர்ந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா வை வெள்ளை மாளிகையில் வரவேற்றுப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு டிரம்ப் இதனைத் தெரிவித்தார். தாய்லாந்துக்கும் அமெரிக் காவுக்கும் இடையில் நீண்ட கால நட்பார்ந்த உறவு நிலவுவதாகவும் திரு டிரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபராக தான் பொறுப்பேற்ற இந்த ஒன்பது மாத காலத்தில் தாய்லாந்துடனான அமெரிக்காவின் உறவு மேலும் வலுவடைந்திருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார்.