வடகொரியாவுக்கு இணையச் சேவை வழங்கும் ரஷ்ய நிறுவனம்

வடகொரியாவுக்கு இணையச் சேவை வழங்கும் ரஷ்ய நிறுவனம்

1 mins read

சோல்: வடகொரியா அதன் இரண்டாம் இணையச் சேவையை ரஷ்ய நிறுவனத் திடம் இருந்து பெறவுள்ளது. இதனால் பெரிய அளவில் இணையத் தாக்குதல் நடத்தும் ஆற்றல் வடகொரியா பெற்றுவிடும் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர். அண்மைய ஆண்டுகளாக நடந்த இணையத் தாக்குதல்கள் தொடர்பாக வடகொரியாவை மேற்கத் திய நாடுகள் வன்மையாகக் கண் டித்துள்ளன. சோனி பிக்சர்ஸ், வங்கிகள் போன்றவை இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. கணினிகள் செயலிழந்துபோன தருவாயில், பணம் கொடுத்தால்தான் மீண்டும் கணினி கள் இயங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனை வட கொரியா முற்றிலும் மறுத்துள்ளது.

இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனமான டிரான்ஸ் டெலிகம் வடகொரியா வுக்கான இணையப் போக்குவரத்தில் இணைந்திருப்பதாக அனைத்துலக அளவில் இணையப் போக்குவரத்தை கண்காணித்து வரும் டின் ரிசர்ச் தெரிவித்தது. இதற்கு முன்பு சீன நிறுவனமான சைனா யுனிகோர்ன் வடகொரியாவின் இணையப் போக்குவரத்தைக் கை யாண்டு வந்தது. தற்சமயம் வட கொரியாவின் 60 விழுக்காடு இணை யப் போக்குவரத்தை ரஷ்ய நிறுவனம் கையாளுகின்ற நிலையில் எஞ்சிய 40 விழுக்காடு அதே சீன நிறுவன வசம் உள்ளது.