லாஸ் வேகஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க மக்கள் நேற்று மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அந்த வரிசையில் வெள்ளை மாளிகையில் நேற்று மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டோனல்டு டிரம்ப், அவரது மகள் இவங்கா, மருமகன் ஜெரட் குஷ்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர், வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ், நிதி அமைச்சர் ஸ்டீபன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் குறைந்தது 59 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிக் காரனின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை அறிய போலிசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். லாஸ் வேகஸில் ஞாயிற்றுக் கிழமை நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக் கான மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டவன் 64 வயது ஸ்டீஃபன் பேடோக் என்று போலிசார் அடையாளம் கண்டுள் ளனர்.
வெள்ளை மாளிகையில் நடந்த மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்கத் தலைமகள் மெலானியா டிரம்ப், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், அவர் மனைவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி

