ஐநா: எங்களுடைய நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த அமெரிக்கா முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ள ஐநாவுக்கான வடகொரிய தூதர், "எத்தகைய தடைகளையும் தாக்குப்பிடிக்க முடியும்," என்று கூறியுள்ளார். சுயசார்புடன் சுயமேம்பாட்டுடன் செயல்படும் வடகொரியா வால் தடைகளை தாங்கிக் கொள்ள முடியும் என்று தூதர் ஜா சோங் நாம் சொன்னார். 2050ல் ஏழ்மையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐநாவின் உலகளாவிய மேம்பாடு குறித்து நடைபெற்ற விவாதத்தில் தூதர் பேசினார். "அமெரிக்கா தொடர்ந்து அணுவாயுத மிரட்டல்களையும் பொருளியல் தடைகளையும் விதித்துவருகிறது. எங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன," என்று திரு ஜா சொன்னார்.
வடகொரியா: எத்தகைய தடைகளையும் தாக்குப்பிடிக்க முடியும்
1 mins read

