கனடாவின் புதிய அரசியல் நாயகரான ஜக்மீட் சிங்

கனடாவின் புதிய அரசியல் நாயகரான ஜக்மீட் சிங்

1 mins read
7278933a-91b1-4221-8388-5a2477f26ce9
-

ஒட்டாவா: கனடாவின் 'புதிய ஜனநாயகக் கட்சியின்' புதிய தலைவராக திரு ஜக்மீட் சிங் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய திரு சிங், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருடியூவின் குணங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் டுருடியூவின் குணங் களே அவர் மக்கள் மனதை கவர்ந்து 2015ல் ஆட்சிக்கு வர காரணமாக இருந்தது. அது போலவே, திரு சிங்கும் கனடா வின் முக்கிய அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பை இப்போது ஏற்க காரணமாக இருந்தது. மாநில அளவில் மட்டுமே இதுவரை சாதித்து வரும் புதிய ஜனநாயகக் கட்சி, திரு சிங்கின் தலைமையின் கீழ் தேசிய அளவில் சாதிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவின் அரசி யல் களத்தில் இந்த அளவிற்கு உயர்ந்தது இதுவே முதன்முறை. எல்லா இனத்தவரையும் அரவ ணைக்கும் கொள்கை கொண்ட நாடாக இருந்தாலும் கனடாவில் முக்கிய அரசியல் கட்சியில் வெள்ளையர் அல்லாத ஒருவர் தலைவராவதும் இதுவே முதன் முறை.