ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் வழக்கத்திற்கு மாறாக நேற்று அரசாங்க உயர் அதிகாரி களைச் சந்தித்து மாநில மேம்பாடு குறித்து கேட்டறிந்தார். அரசு அதிகாரிகள் தம்மைச் சந்திப்பதற்காகவே புதன்கிழமை யை ஒதுக்கியுள்ள அவர் நேற்று நடைபெற்ற முதல் கூட்டத்தில் மாநில வளர்ச்சி குறித்து ஆலோ சனை நடத்தினார். அரசாங்க உயர்மட்ட அதி காரிகள் பங்கேற்ற சந்திப்பில் ஜோகூர் மாநில முதல்வர் முஹமட் காலித் நோர்தீனும் கலந்துகொண் டார். ஜோகூர்பாரு தலைநகரில் இஸ் தானாவில் அமைந்துள்ள அலு வலகத்தில் முதல் சந்திப்பு நடை பெற்றது. ஜோகூர் அரச நீதி மன்றத்தின் தலைவர் அப்துல் ரம்லி, ஜோகூர் இஸ்லாமிய மன்றத்தின் ஆலோ சகர் நோ காடுட், ஜோகூர் பாரு மேயர் ரஹிம் நின், ஜோகூர் பொதுப் பணித் துறை இயக்குநர் முஹமட் சாலே அபு பக்கர் ஆகியோரையும் அவர் இந்தக் கூட்டத்தில் சந்தித்தார். இந்தக் கூட்டங்களின் புகைப் படங்களும் ஊடகத்தில் பதி வேற்றப்பட்டிருந்தன.
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் நேற்று பல அரசு அதிகாரிகளைச் சந்தித்து மாநில மேம்பாட்டு திட்டங்களைக் கேட்டறிந்தார். படம்: அரச அலுவலகம்

