கோலாலம்பூர்: கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணையின் 3வது நாளான நேற்று நச்சு கலந்த சிறுநீர், ரத்தம் உட்பட பத்து விதமான மாதிரிகள் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித் தன. இதில் நரம்புகளைப் பாதிக்கும் பயங்கர 'விஎக்ஸ்' என்ற நச்சு கலந்த திரவமும் அடங்கும். விஎக்ஸ் நச்சுவை ஐநா ஒட்டு மொத்தமாக உயிர்களை அழிக்கும் ஆயுதமாக வகைப்படுத்தியுள்ளது. இதே நச்சு மூலம் இவ்வாண் டின் முற்பகுதியில் 45 வயதான வடகொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் நாம் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்த அவரது முகத்தின் மீது இரு பெண்கள் நச்சு கலந்த துணியைத் தேய்த்ததாகக் கூறப் படுகிறது. இதனால் அவருக்கு உடனடி யாக உடல் நலக்குறைவு ஏற்பட் டது. அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். இவர், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பதால் இதன் பின்ன ணியில் வட கொரியா ஈடுபட்டிருக் கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது. ஆனால் இதனை வடகொரியா மறுத்துள்ளது.
கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணையில் நேற்று முன் தினம் ஷா ஆலம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட வியட்னாமிய பெண் டோன் தி ஹுவோங் (வலம்), இந்தோனீசியாவைச் சேர்ந்த சிட்டி அய்சியா. படம்: ராய்ட்டர்ஸ்

