அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது 59 பேரைக் கண்மூடித் தனமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொலையாளி விரிவாகத் திட்டமிட்ட பிறகே அத்தாக்குதலில் இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலிசார் தன்னை நெருங்கிவிட்டனரா என்பதைக் கண்காணிப்பதற்காக தான் தங்கி யிருந்த ஹோட்டல் அறையிலும் அதற்கு வெளியிலும் படக் கருவிகளை அவன் பொருத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. "திட்டமிட்டு அவன் தாக்குதலில் இறங் கியது உறுதியாகத் தெரிகிறது.
செயலில் இறங்குமுன் அனைத்தையும் அவன் மதிப் பிட்டுள்ளான்," என்றார் லாஸ் வேகஸ் நகர போலிஸ் தலைவர் ஜோசஃப் லோம்பர்டோ. அவனது அறைக்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த ஓர் உணவு சேவை வண்டியில் கேமரா ஒன்றை அவன் பொருத்தியிருந்த தாகவும் திரு லோம்பர்டோ குறிப்பிட்டார். இதற்கிடையே, கொலையாளி ஸ்டீஃபன் பேடோக் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த கதவு உட்பட சில படங்கள் ஜெர்மன் நாளிதழான 'பில்ட்'டுக்குக் கிடைத்தன. அவை உண்மை யானவைதானா என்பதைத் தெளிவுபடுத்த திரு லோம்பர்டோ மறுத்துவிட்டார். இருந்தாலும், தங்களுக்குத் தெரியாமல் அப்படங்கள் எப்படி வெளியாகின என்பது குறித்தும் போலிஸ் விசாரித்து வருகிறது. ஓய்வுபெற்ற கணக்காளரான 64 வயது ஸ்டீஃபன், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட என்ன காரணம் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்டீஃபன் தங்கியிருந்த ஹோட்டல் அறை முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த துப்பாக்கிகள் (இடது படம்). படம்: ராய்ட்டர்ஸ்

