லண்டன் மேயரிடம் ஊபர் நிர்வாகி மன்னிப்பு

லண்டன் மேயரிடம் ஊபர் நிர்வாகி மன்னிப்பு

1 mins read

லண்டன்: லண்டன் மேயர் சாடிக் கானிடம் ஊபர் தலைமை அதிகாரி டாரா கொஸ்ரோஷா‌ஷி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஊபர் டாக்சி சேவையைத் தொடர்ந்து நடத்த தகுதியற்றது என வகைப்படுத்தி அதன் உரிமத்தை லண்டன் போக்குவரத்து ஆணையம் கடந்த மாதம் ரத்து செய்யவிருந்தது. மிக மோசமான சாலைப் போக்கு வரத்துக் குற்றங்கள் ஊபர் மீது பதிவாகி இருப்பதால் இந்த முடிவுக்கு ஆணையம் வந்தது. ஊபர் தலைமை நிர்வாகி தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை தான் வரவேற்பதாக திரு சாடிக் லண்டனில் ஒலிபரப்பாகும் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.