சாபாவில் S$58 மில்லியன் ரொக்கம் பறிமுதல்

சாபாவில் S$58 மில்லியன் ரொக்கம் பறிமுதல்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்தில் கிராமப்புற ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் தொகையை அரசாங்க அதிகாரிகள் சிலர் சுருட்டியதாகக் கூறப்படுவது தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி கள் சாபாவில் 15 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது மொத்தம் 180 மில்லியன் ரிங்கிட் (S$58 மில்லியன்) தொகையை பறிமுதல் செய்திருப் பதாக ஆணையத்தின் தலைவர் ஸுல்கிப்லி அஹ்மாட் கூறினார். வசதி குறைந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதித் திட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் என்று நம்பப்படுகிறது.