கார்த்தி வெளிநாடு செல்ல தடை நீடிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

கார்த்தி வெளிநாடு செல்ல தடை நீடிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

1 mins read

புதுடெல்லி: சிபிஐயால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதால், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரத்தை வெளிநாடு செல்ல அனுமதித்தால் சாட்சியங்களை கலைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அதுவரை கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.