பீர் போத்தல்களை நொறுக்கியதற்காக சுங்கை பெசார் அம்னோ கட்சித் தலைவர் கைது

பீர் போத்தல்களை நொறுக்கியதற்காக சுங்கை பெசார் அம்னோ கட்சித் தலைவர் கைது

1 mins read

ஷா ஆலம்: சிலாங்கூர் செயலகக் கட்டடத்திற்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக் கியதற்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை உதவி கமிஷனர் ஃபாட் ஸில் அகமட் கூறினார். சிலாங்கூர் பீர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்புச் சட்டை அணித் தலைவரான ஜமாலும் அவரின் ஆதரவாளர்கள் 25 பேரும் சேர்ந்து சிலாங்கூர் அரசாங்க அலுவலகத்தின் முன்பு 10 பீர் பெட்டிகளை உடைத்து நொறுக் கியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், அம் னோவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கட்சியின் சார்பில் ஜமால் இதனைச் செய்யவில்லை என்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதி நிதியாக அவர் இதனைச் செய் திருக்கிறார் என்றும் மலேசிய துணைப் பிரதமர் தெரிவித்தார்.