மத்திய அமெரிக்க நாடுகளில் புயல்: 22 பேர் மரணம்

மத்திய அமெரிக்க நாடுகளில் புயல்: 22 பேர் மரணம்

1 mins read
9fc7dff1-ea66-48a8-b7df-cdb150d3394a
-

கோஸ்டா ரிகா, நிகராகுவா, ஹோண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளில் 'நேட்' என்று அழைக்கப்படும் புயலால் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்தப் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்வதுடன் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் பழுதடைந்துள்ளன. புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட கோஸ்டா ரிகாவில் சுமார் 5,000 பேர் அவசரகால முகாம்களில் தங்கியுள்ளனர்.

கோஸ்ட்டா ரிகாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண் சரிவில் பல வீடுகள் சேதம் அடைந்தன. படம்: ராய்ட்டர்ஸ்