சிட்னி: ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத் திருப்பவர்கள் அவற்றை அர சாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கால அவகாசம் சென்ற வார இறுதியில் முடிவுற்ற நிலையில் இந்த மூன்று மாத காலத்தில் மொத்தம் 50,000 துப்பாக்கிகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆஸ்தி ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கடுமை யான துப்பாக்கிச் சட்டங்கள் நடப்பில் உள்ளன.
இருப்பினும் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்பது மக்களின் பாது காப்புக்கு மிரட்டலாக விளங்கு கிறது என்று திரு டர்ன்புல் கூறினார். ஆயுதங்களை ஒப்படைக்க பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் சட்ட விரோத ஆயுத எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார். ஆஸ்திரேலியாவில் 260,000 சட்டவிரோத ஆயுதங்கள் இருக் கக்கூடும் என்று அரசாங்கம் மதிப்பிட்டிருந்தது. பதிவு செய்து கொள்ளாத அல்லது தேவை யில்லாத ஆயுதங்களை ஒப்படைக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

