கோலாலம்பூர்: மலேசியாவில், மூன்று மாநிலங்களில் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனை களில் ஐஎஸ் மற்றும் அபு சயாஃப் குழுக்களுடன் தொடர்புடைய வர்கள் என சந்தேகிக்கப்பட்ட 8 பேரை கைது செய்தனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதிக்கும் அக்டோபர் 6ஆம் தேதிக்கும் இடையே சபா, சிலாங்கூர் மற்றும் பேராவில் புக்கிட் அமான் சிறப்புப் படைப் பிரிவு குழுவினர் மேற்கொண்ட சோதனைகளில் அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் படைத் தலைவர் முகமட் புஸி ஹருண் தெரிவித்தார். இவர் களில் ஐவர், அபு சயாஃப் குழுவுடன் தொடர்பு உடைய வர்கள் என்றும் இருவர் மலேசியர்கள்; இருவர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள்; ஒருவர் மலேசியாவின் நிரந்தர வாசி என்றும் அவர் சொன்னார்.
மலேசியாவில் அதிரடி சோதனைகளில் 8 சந்தேகப் பேர்வழிகள் கைது
1 mins read

