மாஸ்கோ: அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி வரை சென்று தாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஏவுகணை என்று நம்பப்படும் நெடுந்தொலைவு ஏவுகணை சோதனைக்கு வட கொரியா ஆயத்தமாகி வருவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு சென்றிருந்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அன்டன் மோரோஸே„வ் வட கொரியப் பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா திரும்பியதும் இவ்வாறு கூறினார். ரஷ்ய நாடாளுமன்ற கீழ் அவையின் அனைத்துலக விவகாரக் குழுவின் உறுப் பினரான மோரோஸே„வுடன் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் 2-6 வரை வடகொரியப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
" நாங்கள் அறிந்த வரை மற்றும் ஒரு நெடுந்தொலைவு ஏவுகணையை சோதனை செய்வது வடகொரி யாவின் நோக்கமாகும்," என்று திரு மோரோஸே„வ் கூறினார். அந்த ஏவுகணை அமெரிக் காவின் மேற்கு கடலோரப் பகுதி வரை சென்று தாக்கக் கூடும் என்று வடகொரியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

