லாஸ் வேகஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் 58 பேரைக் கொன்று 500க்கும் மேற்பட்டோ ரைக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் புதிய குறிப்பு ஒன்று கிடைத்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஸ்டீஃபன் பேடோக் எவ்வாறு சுட் டால் மேலும் அதிக எண்ணிக்கை யில் உயிர்களைப் பறிக்கலாம் என்று கைப்பட எழுதிய கணக்குக் குறிப்பைப் போலிசார் கண்டுபிடித் துள்ளனர்.
எவ்வளவு தூரம் சுடவேண்டும், எந்த உயரத்தில் அவர் உள்ளார், சுடும் குண்டுகள் எப்படி கூட்டத் தில் விழ வேண்டும் என்பன வற்றை அவர் கைப்பட எழுதி, எந்த குறியை நோக்கி சுட வேண் டும் என்பதை அறிந்து வைத்துள் ளார் என்று லாஸ் வேகஸ் போ லிஸ் துறையின் கே=9 பிரிவின் அதிகாரி டேவிட் நியூட்டன் தெரி வித்துள்ளார். அந்தக் குறிப்புத் தாள், பே டோக் துப்பாக்கிச் சூடு நடத்திய மன்டாலே பே விடுதியின் 32வது மாடியிலிருந்த அறையில் போலி சாரால் கண்டெடுக்கப்பட்டது.

