'வடகொரிய பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது'

'வடகொரிய பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது'

1 mins read

வா‌ஷிங்டன்: வட கொரியாவுட னான அமெரிக்காவின் அரசதந்திர முயற்சிகள் தொடர்ந்து தோல்வி யடைந்து வந்துள்ளதாகவும் அதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது என்றும் அமெரிக்க அதி பர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின் றனர். இரு நாடுகளும் அணுவாயுத சக்திகளை வைத்திருப்பதால் உல களவில் இந்த வளர்ந்துவரும் பிரச்சினையால் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே அதிபர் டிரம்ப், வட கொரியாவுடனான தீராத பிரச்சினைக்கு முன்னாள் அமெ ரிக்க நிர்வாகங்களைக் குறை கூறியுள்ளார். முழுமையான முயற் சிகளை அவர்கள் எடுக்காததால் இன்றுவரை இந்தப் பிரச்சினை வளர்ந்து வருவதாக அவர் சூளு ரைத்துள்ளார்.

இந்நிலையில், வட கொரியா வின் தொடர் அச்சுறுத்தலுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது என்று கூறியிருக்கும் அதிபர் டிரம்ப், அந்த தீர்வு என்ன என்ப தைத் தெளிவாகக் குறிப்பிட வில்லை. இருப்பினும், அந்தத் தீர்வு ராணுவ நடவடிக்கையாகத் தான் இருக்கும் என்று நம்பப் படுகிறது. இதற்கு முன், பியோங்யாங்கின் அணுவாயுத அச்சுறுத்தல்களால் அமெரிக்காவையும் அதன் கூட் டணி நாடுகளையும் பாதுகாக்க வட கொரியாவை முற்றிலும் அழிக்கத் தயார் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த உயர் ராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பில், புயல் அடிக்கும் முன் இப்போது அமைதியைக் காண்கிறீர்கள் என்று மறைமுகமாக அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறி யுள்ளார்.