'வடகொரியா எந்த நேரத்திலும் சினமூட்டும் செயலில் ஈடுபடலாம்'

'வடகொரியா எந்த நேரத்திலும் சினமூட்டும் செயலில் ஈடுபடலாம்'

1 mins read

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் மறைந்த தலைவருமான கிம் ஜோங் இல்லைக் கெளரவிப்பதற்காக வாணவேடிக்கைகள், கொண்டாட்ட நிகழ்ச்சிகள் என வடகொரியா விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் அந்நாட்டின் ஆளும் கொரியத் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் ஆண்டு நிறைவு நாளான இன்று மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கொண்டாட்டங்கள் களைகட்டிய வேளையில் வடகொரியா இந்த வாரத்தில் சினமூட்டும் செயலில் ஈடுபடுவதற்கான சாத்தியம் உள்ளது என்று தென்கொரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.