கிம் ஜோங் நாம் கொலை: 2வது வாரமாக தொடரும் விசாரணை

கிம் ஜோங் நாம் கொலை: 2வது வாரமாக தொடரும் விசாரணை

1 mins read

பெட்டாலிங் ஜெயா: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய உறவினரான கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் மலேசியாவில் விசாரணை 2வது வாரமாக நீடிக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்களும் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரசாயன சோதனைக் கூடத்திற்கு அழைத் துச் செல்லப்பட்டதாகத் தகவல் கள் கூறுகின்றன. கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நாமைக் கொலை செய்ய பயன்படுத்தப் பட்ட கொடிய விஎக்ஸ் ரசாயனப் பொருள் அக்கொலை தொடர் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்கள் உடுத்தியிருந்த ஆடைகளில் காணப்பட்டதாக மலேசியா அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விஎக்ஸ் ரசாய னக் கறை படிந்த ஆடைகளை அடையாளம் காண்பதற்காக அவ்விரு பெண்களும் சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டதாக பத்திரிகை தகவல் தெரிவித்தது.