பங்ளாதேஷ் அருகே படகு மூழ்கியதில் 12 பேர் மரணம்

பங்ளாதேஷ் அருகே படகு மூழ்கியதில் 12 பேர் மரணம்

1 mins read
fa2368dc-ebf2-4391-8b50-c52725f1cc40
-

டாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நீடிக்கும் வன்முறை சம்பவங்களுக்குப் பயந்து அங்கிருந்து தப்பிச்செல்லும் ரோஹிங்யா மக்களின் எண் ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் பயணம் செய்த ஒரு படகு பங்ளாதேஷ் அருகே விபத்துக்குள்ளானது. மியன்மாரையும் பங்ளாதேஷை யும் பிரிக்கும் நஃப் ஆற்றில் ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஞாயிற்றுக் கிழமை விபத்துக்கு உள்ளான தாகவும் டாக்கா அருகே அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்ததாகவும் பங்ளாதேஷ் அதிகாரிகள் கூறினர்.

அந்த விபத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் எத்தனை பேர் சென்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் அப்படகில் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காணாமற்போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக பங்ளாதேஷ் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 10 சிறுவர்களின் சடலங்களும் மேலும் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மியன்மாரிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்யா அகதிகள் படகு மூலம் பங்ளாதேஷை நோக்கிச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்