மலேசியாவில் ஒற்றுமை, நல்லிணக்கம் குறித்து மலாய் ஆட்சியாளர்கள் கவலை

மலேசியாவில் ஒற்றுமை, நல்லிணக்கம் குறித்து மலாய் ஆட்சியாளர்கள் கவலை

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இன அடிப் படையிலான சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தலையெடுத்து வரும் மலேசியாவில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் சிதைவதாக மலாய் ஆட்சியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். "கடந்த சில வாரங்களில், தனிப்பட்ட சிலரின் செய்கைகள் ஏற்புடைய ஒழுக்கத் தரங்களை மீறி, நமது பல சமய, பல இன சமுதாயத்தில் நிலவிவரும் நல் லிணக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன," என்று ஆட்சியாளரின் முத்திரை காப்பாளர் சையது டேனியல் சையது அகமது நேற்று வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

செய்கைகள் தவறான முறையில் இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தப்படுவதால் அல்லது இஸ்லாத்தின் பெயரில் செய்யப் படுவதால் அதிக மோசமான சூழ்நிலையையும் பின்விளைவு களையும் ஏற்படுத்துவதாக ஆட்சியாளர்கள் கருதுகின் றனர்," என்று அவர் கூறினார். முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சலவைக் கடையைக் கண்டித்த ஜோகூர் சுல்தான், பெர்லிஸ் ராஜா மூடா ஆகியோரின் திடமான நடவடிக்கையை மலாய் ஆளுநர்கள் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.