மறைந்த மன்னருக்கு பிரியாவிடை அளிக்க தயாராகும் தாய்லாந்து

மறைந்த மன்னருக்கு பிரியாவிடை அளிக்க தயாராகும் தாய்லாந்து

1 mins read

பேங்காக்: தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல் யதேஜின் இறுதிச் சடங்கு இம்மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி காலமான மன்னருக்கு ஐந்து நாட்களுக்குக் கோலாக லமான இறுதிச் சடங்குகளுடன் அவரது உடல் இம்மாதம் 26ஆம் தேதி தகனம் செய்யப்படவிருக்கிறது. 70 ஆண்டு கள் தாய்லாந்தின் மன்னராக இருந்த பூமிபோலின் உடல் தங்கத் தேரில் ஏற்றி செல்லப்பட்டு பேங்காக்கில் 10 மாதங்க ளாக கட்டப்பட்டு வரும் தகனக்கூடத்தில் தகனம் செய்யப்ப டும். ஆயிரக்கணக்கானோர் இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.