பிலிப்பீன்சில் போதைப்பொருள் கடும் நடவடிக்கைகள் நிறுத்திவைப்பு

பிலிப்பீன்சில் போதைப்பொருள் கடும் நடவடிக்கைகள் நிறுத்திவைப்பு

1 mins read

மணிலா: போதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க பிலிப்பீன்ஸ் போலிசார் மேற்கொண்டு வந்த கடும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறின. போதைப் பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே போலிசாருக்கு வழங்கிய அதிகாரத்தின் பேரில் நன்கு விசாரிக்கப்படாமலேயே பலர் கொல்லப்பட்டனர். போதைப்பொருளை ஒழிக்க போலிசார் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தன. மனித உரிமை குழுக்களும் இந்த நடவடிக்கையை குறை கூறின. இதனால் பிலிப்பீன்ஸ் மக்கள் மத்தியில் அதிபர் டுட்டர்டேயின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து திரு டுட்டர்டே, போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு மட்டுமே கவனிக்கும் என்று அறிவித்துள்ளார்.