லாஸ் ஏஞ்சலிஸ்: கலிஃபோர்னியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் போராடி வரும் வேளையில் ஹெலிகாப்டர்கள் மூலம் பலரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி வருகின்றனர். காட்டுத் தீ கொழுந்து விட்டு எரியும் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 42 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றப்பட்டதாகவும் ஐந்து நாய்கள் மற்றும் ஒரு பூனையும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் ஹெலிகாப்டர் விமானி ஒருவர் கூறியுள்ளார். கடும் வறட்சி காரணமாக கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இத்தீயில் அதிக அளவு உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக மாநில மேயர் தெரிவித்துள்ளார். தீயில் பல வீடுகள் எரிந்து சாம்பலாகின. ஏராளமான பயிர் நிலங்கள் நாசமாகின. வீசும் பலத்த காற்று தீ வேகமாகப் பரவ காரணமாக உள்ளது.
கலிஃபோர்னியா காட்டுத் தீயிலிருந்து பலர் மீட்பு
1 mins read

