ஹனோய்: வியட்னாமில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பை கருத்தில்கொண்டு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர் கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற் பட்டுள்ளதாகவும் கனமழையிலும் நிலச்சரிவிலும் சிக்கி சுமார் 21 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 200 வீடுகள் இடிந்து விழுந்த தாகவும் 18,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் பல வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியிருப் பதாகவும் தேசிய பேரிடர் மையம் அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப் பிட்டுள்ளது. சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர்.
வியட்னாமில் பல இடங்களில் வெள்ளநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. படம்: ஏஎஃப்பி

