மலேசிய முன்னாள் அமைச்சர் ஷஃபி விசாரிக்கப்படலாம்

மலேசிய முன்னாள் அமைச்சர் ஷஃபி விசாரிக்கப்படலாம்

1 mins read

கோத்தா கினபாலு: சாபா மாநில ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாடியது தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மலேசிய முன்னாள் அமைச்சர் ஷஃபி அப்டலும் விசாரிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் கிராமப்புற, வட்டார வளர்ச்சி அமைச்சரான ஷஃபி அப்டல் தற்போது முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

'பார்ட்டி வாரிசான் சாபாவின்' தலைவரான ஷஃபி அப்டல் வரும் ஞாயிற்றுக்கிழமை சாபாவில் நடைபெறும் வாரிசான் ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாபா ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு திட்டத்தில் முறைகேடு நடந் திருப்பது தொடர்பில் திரு ஷஃபி அப்டலை மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரிக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. கிராமப்புற மக்களுக்கான அரசு திட்டத்தில் 1.5 பில்லியன் ரிங்கிட் (S$481 மில்லியன்) பணம் கையாடப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் 7 பேரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.