கோலாலம்பூர்: அண்மை காலம் வரை வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்த மலேசியா வடகொரியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்க ளுக்குத் தடை விதித்துள்ளது. வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களை முடக்கும் அனைத் துலக முயற்சிக்கு அதன் ஆத ரவை காட்டும் வகையில் இந்தத் தடையை மலேசியா அறிவித் துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் $6.6 மில்லியன் பெறுமானமுள்ள பொருட்களை வடகொரியாவிலிருந்து இறக்குமதி செய்த மலேசியா, ஜூன் மாதத் திலும் ஜூலை மாதத்திலும் எது வும் வாங்கவில்லை.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத் தில் கடந்த பிப்ரவரி மாதம் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய உறவினர் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வந்துள்ளது. மலேசியர்கள் வடகொரியா விற்கு செல்வதை சென்ற மாதம் கோலாலம்பூர் தடை செய்தது. மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த இரண்டு வாரங்களில் அந்தத் தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. இரு நாட்டுத் தலைவர் களின் சந்திப்புக்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய டிரம்ப், "வடகொரியாவுடன் மலேசியா இனி வர்த்தகம் செய்யாது. அது முக்கியமான முடிவாகும்," என்று கூறியுள்ளார்.

