மலேசியா: தடுப்புக் காவலில் 45 வெளிநாட்டு பயங்கரவாதிகள்

மலேசியா: தடுப்புக் காவலில் 45 வெளிநாட்டு பயங்கரவாதிகள்

1 mins read

மலேசியாவில் இந்த ஆண்டு மொத்தம் 45 பயங்கரவாதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய போலிஸ் தலைவர் முகமது ஃபுஸி ஹாருன் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒன்பது பேர் அபு சாயஃப் குழுவையும் மூவர் ஃபெடுல்லா துருக்கிய அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்று காவல் துறைக் கண்காணிப்பாளர் தெரி வித்தார். மேலும் ஒருவன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அல் பேனியன் பயங்கரவாத அமைப் பைச் சேர்ந்தவன் என்றும் மற் றொருவன் பங்ளாதேஷ் ஜமாதுல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த வன் என்றும் அவர் சொன்னார். மற்ற 31 பேரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட் டது. அவர்களில் ஈராக்கைச் சேர்ந்த மூவர் ஐஎஸ் அமைப்பின் ஈராக்கியப் பிரிவில் படைத் தலைவர்களாக இருந்தவர்கள்.