தலிபான் குழுவிடம் சிக்கியிருந்த தம்பதியர் கனடா திரும்பினர்

தலிபான் குழுவிடம் சிக்கியிருந்த தம்பதியர் கனடா திரும்பினர்

1 mins read

இஸ்லாமாபாத்: கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளிடம் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த அமெரிக்க-கனடா தம்பதியர் பாகிஸ்தான் ஒத்துழைப்புடன் மூன்று நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டனர். அத்தம்பதியர் தங்களின் இரு குழந்தைகளுடன் நேற்று கனடாவுக்குத் திரும்பினர். கனடா சென்று சேர்ந்ததும் செய்தியாளார்களிடம் பேசிய திரு ஜோ‌ஷுவா போயில் தலிபான் குழுவினர் தங்களுக்கு இழைத்த அட்டூழியங்களைப் பற்றிக் கூறினார். தங்களின் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையை தலிபான் போராளிகள் கொன்றுவிட்டதாகவும் தன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறினார். கனடாவைச் சேர்ந்த ஜோ‌ஷுவா போயில் மற்றும் அவரது அமெரிக்க மனைவி கெய்ட்லன் கோல்மேன் ஆகியோர் 2012ஆம் ஆண்டு ஆப்கானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது தலிபான் போராளிகளால் கடத்தப்பட்டனர். அத்தம்பதியர் ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக இருந்தபோது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.