ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நாடுகள்

ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நாடுகள்

1 mins read

வா‌ஷிங்டன்: ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டை ரத்து செய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள வேளையில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஈரான் அணுசக்தி உடன்பாட்டுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் உரையாற்றிய திரு டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டில் தான் கையெழுத் திடுவதை நிறுத்தப்போவதாக அறிவித்தார். டிரம்ப்பின் அந்த முடிவுக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ரஷ்யா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த உடன்பாடு அதில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளின் தேசிய நலனுக்கு உகந்தது என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. செயல்பாட்டில் இருக்கும் ஒரு உடன்பாட்டை எந்த ஒரு தனி நாடும் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியைத் தலைவர்கள் கூறியுள் ளனர். அணுசக்தி உடன்பாட்டை கைவிடும் திரு டிரம்ப்பின் முடிவால் அமெரிக்கா என்றும் இல்லாத அளவுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய அதிபர் ஹசான் ரவ்ஹானி கூறி யுள்ளார். பல நாடுகள் கையெழுத் திட்டுள்ள ஓர் அனைத்துலக உடன்பாட்டை ஒரு அதிபர் எவ்வாறு தன்னிச்சையாக ரத்து செய்ய முடியும் என்று ஈரானிய அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.