கனமழையால் பேங்காக்கில் வெள்ளம்

கனமழையால் பேங்காக்கில் வெள்ளம்

1 mins read

பேங்காக்: தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் கடந்த இரு நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் நிரம்பி யிருப்பதால் பேங்காக் குடியிருப் பாளர்கள் வேலைக்கு அல்லது வியாபாரம் செய்வதற்கு அவசர மாகச் செல்லவேண்டிய தேவை இல்லை என்றால் வீடுகளிலேயே தங்கியிருப்பது நல்லது என்று பேங்காக் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமையிலிருந்து இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக நேற்று குறைந்தது 55 சாலைகள் வெள்ளநீரில் மூழ்கி யிருந்ததாகக் கூறப்பட்டது. வீடுகள் மற்றும் கடைகளுக் குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட நேர்ந்ததாகவும் கடைக் காரர்கள் வாளிகள் மூலமாக தண்ணீரை வெளியில் ஊற்றிய தாகவும் பேங்காக் தகவல்கள் கூறின.

பேங்காக் தெருக்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு ஒருவர் உதவுகிறார். படம்: ஏஎஃப்பி