வாஷிங்டன்: 'நாப்தா' எனும் வட அமெரிக்க தடையற்ற வர்த் தக உடன்பாட்டைப் புதுப் பிக்க அமெரிக்கா முன் வைக் கும் கடுமையான கோரிக் கைகளால் அத்திட் டத்தை ஒன்றிணைந்து நிறை வேற்ற கனடா மற்றும் மெக்சி கோ நாடுகள் திணறி வரு- கின்றன. இந்தத் தடையற்ற வர்த்- தக உடன்பாட்டில் அமெரிக் காவை முன்னிலைப் படுத்தும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கோரிக் கையை சிலர் குறைகூறி யுள்ளனர். எனவே இந்த உடன்பாடு நிறைவேறுவதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த ஆண்டு இறுதிக் குள் புதுப்பிக்கப்பட வேண்- டிய தடையற்ற வர்த்தக உடன்பாடு அமெரிக் காவின் கோரிக் கையால் நிறைவேற்றப் படாமல் போகக்கூடும் என்று கூறப் படுகிறது. "நாப்தா உடன்பாட்டால் அமெரிக்காவின் தயாரிப்புத் துறையின் ஏராளமான வேலை கள் மெக்சிக்கோ வுக்கு இடம்பெயர்கின்றன. எனவே அதற்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும். இல்லையெனில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த உடன்பாட்டில் அமெரிக் காவுக்குச் சாதக மாக திருத்தம் செய்யப்பட வேண்டும்," என கடந்த ஆண்டுத் தேர்தல் பிரசாரத்- தின்போது பலமுறை அதிபர் டிரம்ப் கூறிவந்தார். இதுவரை நடந்துள்ள ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தை களிலும் அமெரிக்கா தனது கொள்கைகளில் இருந்து தளராமல் பிடிவாதமாக இருந்துவருகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பு வகிக்கும் மெக்சி கோவின் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜெமைன் செர்ரா கூறுகையில், "அமெரிக்கா வின் கோரிக்கைகள் பொரு ளியல் ரீதியில் அறிவுப்பூர்வ மானதாக இல்லை. இந்த உடன்பாட்டை கிடப்பில் போட்டு வைத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது," என்று சாடியுள்ளார்.

