மராவி: பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி பகுதியில் ஐஎஸ் போராளிகளை முடக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வேளையில் நேற்று பிலிப்பீன்ஸ் ராணுவ படையினர் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் வீடு வீடாகச் சென்றும் ஐஎஸ் போராளிகளைத் தாக்கியுள்ளனர். போராளிகள் நான்கு மாதங்களாக மராவி நகரைக் கைப்பற்றி தாக்குதல்கள் நடத்தியதில் இதுவரை 1000க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இன்று வரை பல முறை மராவியைக் கைப்பற்றுவதற்கான கால அவகாசங்களைத் தவறவிட்டாலும் இம்முறை மிக விரைவில் போராளிகளின் பிடியிலிருந்து மராவி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
'1000க்கும் மேலான உயிர்களை பறித்த மராவி தாக்குதல் விரைவில் முடிவுறும்
1 mins read

