மொகாடிஷு: சோமாலியா தலை நகர் மொகாடிஷுவில் உள்ள விடுதியின் முன் நின்ற கனரக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. இது சோமாலியாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரை அந்தத் தாக்குத லுக்கு எந்த இயக்கமும் பொறுப் பேற்கவில்லை. இருப்பினும், அல் காய்தா இயக்கத்தின் ஆதரவு அமைப்பான ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்திவருவதால் இதுவும் அவர்களின் கைவரிசை யாக இருக்கும் என்று சந்தேகிக்கப் படுகிறது. போர்க்களம் போல் அந்தக் குண்டு வெடிப்பு நடந்த இடம் காட்சியளித்ததாக கூறப் படுகிறது. பிரபலமான சஃபாரி விடுதிக்கு முன் நேற்று முன்தினம் நடந்த இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சோமாலியா வாகன வெடிகுண்டு தாக்குதலில் 85 பேர் மரணம்
1 mins read

