ஐஎஸ் போராளிகள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்

ஐஎஸ் போராளிகள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்

1 mins read

ஐன் இஸ்ஸா: சிரியாவின் ராக்கா நகரிலிருந்து ஐஎஸ் போராளிகள் இரவோடு இரவாக பொதுமக்கள் சுமார் 400 பேரை மனிதக் கேடய மாகப் பயன்படுத்தி பிடித்துக் கொண்டு வெளியேறி உள்ளனர். இன்னும் சில போராளிகள் சிரியாவில் உள்ளனர் என்றும் அவர்கள் சரணடையவோ மரண மடையவோ முடிவு செய்யவேண்டும் என்று ராக்கா மன்ற உறுப்பினர் உமர் அலூஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவு கூட்டணியான சிரியா ஜனநாயகப் படை, தங்களின் இறுதிக் கட்ட போராட்டத்தில் உள்ளதாகவும் கடைசி 10 விழுக்காட்டு போராளி களைப் பிடித்து ஐஎஸ் பிடியில் இருந்த நகரைக் கைப்பற்றப் போவதாகவும் கூறியுள்ளது.

அரபு மற்றும் குர்திய வீரர்களின் கூட்டணிதான் சிரியா ஜனநாயகப் படையாகும். 2014ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியில் ராக்கா இருந்தது. இஸ்லாமிய நாட்டை உருவாக்கப்போவதாக சபதம் எடுத்திருந்த ஐஎஸ் அமைப்பு முதன் முதலில் ராக்கா நகரைக் கைப்பற்றி தன் குறிக்கோளை அடைந்ததாக பெருமை கொண்டு இருந்தது. அன்றிலிருந்து ராக்கா என்றால் ஐஎஸ் அமைப்பின் துன்புறுத்தல் களுக்கு மறுபெயராகவும் வெளி நாடுகளில் தாக்குதல் நடத்துவதற் கான தலைமை இடமாகவும் அது செயல்பட்டது.